மகளிர் உரிமை தொகை பெறுவதில் மீண்டும் சிக்கல்?? தமிழக அரசு எடுக்க போகும் அடுத்த நடவடிக்கை தான் என்ன??

0
மகளிர் உரிமை தொகை பெறுவதில் மீண்டும் சிக்கல்?? தமிழக அரசு எடுக்க போகும் அடுத்த நடவடிக்கை தான் என்ன??
மகளிர் உரிமை தொகை பெறுவதில் மீண்டும் சிக்கல்?? தமிழக அரசு எடுக்க போகும் அடுத்த நடவடிக்கை தான் என்ன??

தமிழக அரசால் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி இருந்து 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களையும் இத்திட்டத்தில் பயன்பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தாலுகா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்களை நிறுவியுள்ளது. மேலும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதனால் அதிகப்படியான மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. மேலும் இச்சேவையை பெற நெடு நேரம் வரிசையில் காத்திருந்தும் சில நேரங்களில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கூடுதல் உதவி மையங்கள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் மக்கள் குறுகிய நேரத்தில் இச்சேவை பெறவும், கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும் முடியும் என கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இந்த சேவையும் இலவசம்…, சிறப்பு முகாம்கள் வைத்து வழங்க மேற்கு வங்க மாநில அரசு ஏற்பாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here