
செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த மகளிர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இத்திட்டத்தில் உரிமை பெற தகுதியில்லாத விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியின் மூலம் விளக்கம் அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதோடு இத்திட்டத்தில் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறியவர்கள் அருகில் உள்ள இ- சேவை மையத்தில் இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் கொட்டாச்சியரின் மூலம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.