கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் – லைக்ஸை அள்ளிய ஸ்டில்ஸ்!!

0

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில் தன் கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

காஜல் அகர்வால்

தமிழில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அடுத்து அவர் நடித்த மகதீரா செம ஹிட் அடுத்தது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு செம லக் அடித்தது என்றே சொல்லலாம்.

பல பட வாய்ப்புகள் கைக்கூடி வந்தது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் காஜல். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

மெர்சல், ஜில்லா போன்ற படங்கள் தமிழில் அவருக்கு ஹிட் கொடுத்தது. ரசிகர்களின் கனவுகன்னியாகவே வலம் வந்தார். விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் முதலில் கமிட்டானது காஜல் தானாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தான் கால் சீட் பிரச்சனையால் ஹன்சிகா நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம். தற்போது வரை அதனை மிஸ் செய்து விட்டோம் என்று வருத்தம் தான் படுகிறாராம்.

இப்படி இருக்க கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்சுலு என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here