‘டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ மத்திய அமைச்சர் பேட்டி!!

0

கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ‘டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்கவும் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பரவலை தடுக்கும் பணிகளில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே மக்களுக்கு தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தி வந்தது அரசு. சினிமா பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் புகைப்படத்தை வெளியிட்டுவந்தனர்.தற்போது மக்களிடையே போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பயிற்சி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும், அதற்குள் 216 கோடி அளவை உற்பத்தி செய்வதற்கான சுகாதார வரைபடத்தை சுகாதார அமைச்சகம் வழங்கியது என பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அரசு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி இதுவரை 20.57 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here