7 பேரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கு – இந்தியாவில் முதன்முதலாக தூக்கிலிடப்படும் பெண்!!

0

இந்தியா விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு  முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த அந்த பெண் தன் பெற்றோரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் குற்றவாளி:

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ஷப்னம். இவர் சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். சலீமை பிடிக்காத காரணத்தினால் ஷப்னத்தின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2008ல் திடீரென ஒருநாள் ஷப்னத்தின் பெற்றோர் உட்பட 7 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் கழுத்திலும் கத்தி குத்தினால் ஏற்பட்ட காயம் இருந்தது. அடையாளம் தெரியாத சிலர் அவர்களை கொலை செய்து விட்டு தப்பியோடியதாக ஷப்னம் தெரிவித்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் ஷப்னமும் சலீமும் சேர்ந்து ஷபானத்தின் பெற்றோர் உட்பட 7பேரை கொலை செய்த சம்பவம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் – தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம்!!

கைது செய்யப்பட்ட ஷப்னமும் அவரது காதலருக்கும் மாவட்ட நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் அவர்களது தூக்கு தண்டனையை 2010ல் உயர் நீதிமன்றமும் 2015ல் உச்ச நீதி மன்றமும் உறுதி செய்து தீர்ப்பளித்தன. ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஷப்னத்தின் தூக்கு தண்டனை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீரட்டில் உள்ள பெண்கள் சிறைச்சாலை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பு பெண் குற்றவாளிகளை கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் இந்தியா சுதந்தரமடைந்த பிறகு பெண்கைதிகள் யாரு தூக்கிலிடப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது முதன் முறையாக ஷப்னம் தூக்கிலிடப்படவிருக்கிறார். இன்னும் தேதி முடிவாகாத நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய பவன் ஜலாட் தான் ஷப்னத்தையும் தூக்கிலிடும் பணிக்கு நியமிக்கப்பட்டுளார். ஷப்னத்திற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் இந்திய விடுதலைக்குப்பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாக இவர் இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here