KKR அணிக்கு எதிராக ரன் அவுட்டான ஜோஸ் பட்லருக்கு அபராதம்…, ஐபிஎல் விதியை மீறியதால் நடந்த விபரீதம்!!

0
KKR அணிக்கு எதிராக ரன் அவுட்டான ஜோஸ் பட்லருக்கு அபராதம்..., ஐபிஎல் விதியை மீறியதால் நடந்த விபரீதம்!!
KKR அணிக்கு எதிராக ரன் அவுட்டான ஜோஸ் பட்லருக்கு அபராதம்..., ஐபிஎல் விதியை மீறியதால் நடந்த விபரீதம்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஐபிஎல்லின் நடத்தை விதியை மீறிய குற்றத்திற்காக, ஜோஸ் பட்லருக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 56 வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 150 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 13.1 ஓவரிலேயே 151 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 98*, சஞ்சு சாம்சன் 48* என அதிரடியாக விளையாடி அசத்திருந்தனர். ஆனால், ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர், ஆண்ட்ரே ரஸ்ஸலின் அபாரமான பில்டிங்கால் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு, தேவையற்ற வார்த்தைகளை ஜோஸ் பட்லர் வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் வாய்ப்பை பெறுமா?? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இதனால், ஐபிஎல்லில் நடத்தை விதியை மீறிய குற்றத்திற்காக, ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகக் குழு, “ஐபிஎல் நடத்தை விதி 2.2ன் கீழ் லெவல் 1 குற்றத்தை ஜோஸ் பட்லர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விதி மீறலுக்காக, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது மற்றும் கட்டுப்பாடானது” என கூறி அபராதம் விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here