
தமிழர்களின் கலாச்சார விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு பல்வேறு பிரச்சனைகளை தாண்டி பொங்கல் பண்டிகை அன்று மதுரையில் தொடங்கியது. அன்று முதல் திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மாடுபிடி வீரர், பார்வையாளர் ஆகியோர்கள் உயிரிழக்கும் கோர சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து தமிழக அரசு முக்கிய கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. அதாவது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்போ, நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.
அரசு ஊழியர்களே கவனம்., இந்த வார்னிங் உங்களுக்குத்தான்! போக்குவரத்து துறை திடீர் கண்டிஷன்!!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இதுவரை சில உயிரிழப்புகளும், 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமும் அடைந்துள்ளார்கள். ஆனால் போட்டியாளர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற உன்னதமான திட்டம் பயனாளர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டும் எனில் இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.