அரசு ஊழியர்களே கவனம்., இந்த வார்னிங் உங்களுக்குத்தான்! போக்குவரத்து துறை திடீர் கண்டிஷன்!!

0
அரசு ஊழியர்களே கவனம்., இந்த வார்னிங் உங்களுக்குத்தான்! போக்குவரத்து துறை திடீர் கண்டிஷன்!!
அரசு ஊழியர்களே கவனம்., இந்த வார்னிங் உங்களுக்குத்தான்! போக்குவரத்து துறை திடீர் கண்டிஷன்!!

நாட்டில் ஆண்டுதோறும் பெருகி வரும் சாலை விபத்துகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து போலீசார் சமூக ஊடகம், கண்காணிப்பு கேமரா என பல்வேறு நடவடிக்கையை கையாள்கின்றனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை எஸ்.பி. மாறன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெல்மெட் சார்ந்த வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதில் அரசு சார்ந்த ஊழியர்களும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிகிறார்களா? என்பதை ஆய்வு செய்து கடும் அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ECR போன்ற முக்கிய சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தாமல் வாகனங்களை பார்க்கிங் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here