காயத்தில் இருந்து மீண்டு குறுகிய மாதத்தில் இத்தனை விருதுகளா?? நடப்பு ஐபிஎல் அசத்தும் ஜடேஜா!!

0
காயத்தில் இருந்து மீண்டு குறுகிய மாதத்தில் இத்தனை விருதுகளா?? நடப்பு ஐபிஎல் அசத்தும் ஜடேஜா!!

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விலகி இருந்தார். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர், காயங்களில் இருந்து மீண்டு, முதலில் உள்ளூர் போட்டியில் விளையாடி, சர்வதேச அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரது, வருகை இந்திய அணிக்கே கூடுதல் பலத்தை சேர்த்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த பார்டர்–கவாஸ்கர் டிராபியை இந்தியா வெல்வதற்கு இவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதனால், 2 முறை “பிளேயர் ஆப் தி மேட்ச்” (ஆட்ட நாயகன்) விருதை வென்றதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை வாங்கினார்.

Young கரிகாலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சியான் விக்ரம்.., சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன இளம் நடிகர்!!

இதன் தொடர்ச்சியாக, தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வரும் இவர், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் 3 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார். இவரது, அறுவை சிகிச்சைக்கு, பிறகான குறுகிய மாதத்தில் அதிக விருதுகளை வென்று அசத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here