
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
குறிப்பாக சியான் விக்ரம் மிரட்டலான நடிப்பை ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு தத்ரூபமாக இருந்தது. அதே போல் சியான் விக்ரமின் யங் ஆதித்ய கரிகாலனாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் இளம் நடிகர் நெஜமாவே சந்தோஷ்.
நடிகர் சரவணனுக்கு கொலை மிரட்டல்.., புகாரை எடுக்காத காவல் துறை.., அமைச்சரிடம் மனு!!
அவரின் நடிப்பை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இளம் வயது ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் 2 நடித்து, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்த இளம் நடிகருக்கு சியான் விக்ரம் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் நெஜமாவே சந்தோஷ் அற்புதமாக நடித்ததற்காக சியான் விக்ரம் ஒரு பூங்கொத்தையும் சில உணவுப் பொருட்களையும் பரிசாக வழங்கி உள்ளார். அவருக்கு நன்றி கூறும் விதமாக நெஜமாவே சந்தோஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.