பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் – வெளியான ஆய்வறிக்கை!

0
பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் - வெளியான ஆய்வறிக்கை!
பணி நீக்கங்களுக்கு மத்தியில் வேலை வாய்ப்பு வழங்கும் ஐடி நிறுவனங்கள் - வெளியான ஆய்வறிக்கை!

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. தற்போது தொடங்கி இருக்கும் 2023 ஆம் ஆண்டில் நிரந்தரமான வேலையை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் பல ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. அதாவது முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான TCS, Infosys, HCL Tech Tech Mahindra, Wipro, LTIMindtree, Coforge போன்றவை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் ஆட்டோ கட்டண கொள்ளை .. வலுக்கும் கோரிக்கை – ஏற்குமா அரசு?

Naukri Jobspeak இன் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு 9% உயர்ந்து இருக்கிறது. இது கொரோனாவிற்கு முன்னதாக இருந்த 7% வாய்ப்பை விட அதிகம் ஆகும். கடந்த 3 மாதங்களில் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்த மாதம் வேலைவாய்ப்பில் 10% வளர்ச்சி இருக்கிறது. Naukri.com இல் விப்ரோவில் தற்போது 453 வேலை காலியிடங்கள் இருப்பதாகவும், இன்ஃபோசிஸில் 1,557 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், எச்.சி.எல் டெக் இன்ஜினியரிங் – சாப்ட்வேர் & கியூஏ மற்றும் ஐடி & இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆகியவற்றில் 472 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here