ராதிகா கடைசில பாக்கியாவுக்கு மாமா வேலை பார்த்துட்டாங்களே.., கதையின் ட்ராக்கை மாற்றிய பாக்கியலட்சுமி!!

0
ராதிகா கடைசில பாக்கியாவுக்கு மாமா வேலை பார்த்துட்டாங்களே.., கதையின் ட்ராக்கை மாற்றிய பாக்கியலட்சுமி!!
ராதிகா கடைசில பாக்கியாவுக்கு மாமா வேலை பார்த்துட்டாங்களே.., கதையின் ட்ராக்கை மாற்றிய பாக்கியலட்சுமி!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கியா கோபியிடம் விட்ட சவாலை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். ஆனா ராதிகா தொடர்ந்து பாக்கியாவை சீண்டி கொண்டே இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட இங்கிலீஷ் தெரியவில்லை என்று பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள கிளாஸில் சேருகிறார். இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் பாக்கியா போன் பேசிக்கொண்டு வண்டியில் வர, எதிரே புல்லட் பைக்கில் வந்து என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் ரஞ்சித். பாக்கியா வண்டியுடன் அவர் மீது மோதி கீழே விழ அவர் பாக்யாவுக்கு உதவ முன்வருகிறார். பாக்கியா நானே எழுந்திரிச்சுக்குறேன் என சொல்லி எழுந்து அங்கிருந்து கிளம்புகிறார்.

நட்டநடு வீதியில்.., காதலியை அடித்த இளைஞன்.., தட்டிக் கேட்டு Sorry சொல்ல வைத்த இளம் ஹீரோ – வீடியோ வைரல்!!

மறுபக்கம் பாக்கியா முதல் நாள் கிளாஸ்க்கு வர அங்கு அவரும் இருக்கிறார். அப்போது பாக்கியா அங்குள்ளவர்களிடம் இங்கிலீஷில் பேச முயல அனைவரும் கிண்டலடிக்கின்றனர். ஆனா புல்லட் பைக்கில் வந்த அவர் மட்டும் பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது இனி வரும் எபிசோடில் அவர் பாக்யாவுக்கு எல்லா விஷயத்துலயும் துணையாக இருப்பார் என்று தான் தெரிகிறது. எப்படியும் பாக்கியாவுக்கு இவர் ஜோடியாக வந்து விடுவாரோ என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. இப்படி ராதிகாவே மாமா வேலையை பார்த்துட்டாங்களே என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here