அதிகரிக்கும் ஆட்டோ கட்டண கொள்ளை .. வலுக்கும் கோரிக்கை – ஏற்குமா அரசு?

0
அதிகரிக்கும் ஆட்டோ கட்டண கொள்ளை .. வலுக்கும் கோரிக்கை - ஏற்குமா அரசு?
அதிகரிக்கும் ஆட்டோ கட்டண கொள்ளை .. வலுக்கும் கோரிக்கை - ஏற்குமா அரசு?

வேலூர் மாவட்டத்தில் கட்டண கொள்ளையை தடுக்க ப்ரீபெய்டு ஆட்டோ சேவை முறையை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோ கட்டண கொள்ளை:

2008ம் ஆண்டு வேலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டது. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சிக்கு தேவையான எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. மக்கள் தொகை அதிகம் இருத்தாலும் சாலை வசதிகள் இன்னும் அதற்கேற்ப மாறுபடவில்லை. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – திருவள்ளுவர் சிலையை காண மார்ச் 6 முதல் அனுமதி!

சிஎம்சி, விஐடி, பொற்கோயில் போன்ற இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அவர்கள் சென்று வருவதற்கு அதிக அளவில் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். தமிழ் பேச தெரியாததால் அவர்களிடம் சில ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், இதனால் ஏராளமான சண்டை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது.

சுமார் 8 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருவதால், அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளை தடுப்பதற்காக ப்ரீபெய்டு ஆட்டோ சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here