‘நான் காதலில் விழுந்த தருணம்’…..,நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பதிவு…..,

0
'நான் காதலில் விழுந்த தருணம்'.....,நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பதிவு.....,
'நான் காதலில் விழுந்த தருணம்'.....,நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பதிவு.....,

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் ஆன சந்திப்பை காதலில் விழுந்த தருணம் என நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தமிழ் சினிமாவில் ‘நான் சிரித்தால்’, ‘தமிழ்ப்படம் 2’ போன்ற நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம்….,பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை….,

இப்போது, தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை சந்தித்துள்ளார். உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்த பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா, ‘இந்த பெண்ணுடன் நான் காதலில் விழுந்த அந்த நொடி. நான் சொல்வது, ஐ லவ் யூ மட்டும் தான்’ என்ற கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here