தமிழக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
தமிழக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!
தமிழக இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் திடீர் மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

சமீப காலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல சாதனைகளை படைத்து வருகிறது. அண்மையில் சந்திரயான் 3 யை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி உலக நாடுகள் செய்யாத சாதனையை இந்தியா படைத்தது. இதைத்தொடர்ந்து ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது. இப்படி அடுக்கடுக்காக பல சாதனைகளை செய்து வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் தான். இப்படி இருக்கையில் இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டனில் குரல் கொடுத்து வரும் பணியை செய்து வருகிறார். மேலும் இவர் சந்திரயான் 3 க்கும் இவர் தான் குரல் கொடுத்துள்ளார். ஆனால் இதுவே அவரது கடைசி கவுன்டவுனாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இஸ்ரோவில் பணி புரிந்து பல விருதுகளை வென்ற வளர்மதி சென்னையில் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பிற்கு பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களே உஷார்., இந்த தவறை செய்தால் அவ்ளோதான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here