ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்…, அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா??

0
ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்..., அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா??
ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்..., அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா??

இந்தியன் சூப்பர் லீக் தொடரின், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை ஈஸ்ட் பெங்கால் அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 11 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கேரளா, மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மையமாக கொண்டு 11 அணிகளும் மோதி வருகின்றன. இதன் லீக் சுற்றுகள் வரும் 26ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், விறுவிறுப்பாக போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், நேற்று புள்ளிப் பட்டியலில் டாப் 3 யில் இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஈஸ்ட் பெங்கால் அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோலுக்காக போராடினர். ஆனால், கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், முதல் பாதி கோலின்றி முடிந்தது.

உங்கிட்ட இது குறைஞ்சிடுச்சா? ஏடாகூட கேள்வி கேட்ட பயில்வான்! நெத்தியடி பதில் கொடுத்த அஜித்!!

இதையடுத்து, தொடங்கப்பட்ட 2வது பாதியின் 77 வது நிமிடத்தில், ஈஸ்ட் பெங்கால் வீரர் கிளீடன் சில்வா கோல் ஒன்றை அடித்தார். இதே நிலையே இறுதி வரை தொடர்ந்தால், ஈஸ்ட் பெங்கால் அணியானது, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம், 28 புள்ளிகளுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3 வது இடத்தையும், 15 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் அணி 9வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டனர். இந்த லீக் தொடரின் இறுதி சுற்று மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here