இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இது இந்திய அணியின் பலத்தை மேலும் குறைக்கும் என்பதால் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.
முதல் டெஸ்டில் படுதோல்வி..!
இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதற்கு இந்திய அணியின் மோசமான பேட்டிங் முக்கிய காரணமாகும். இரண்டாவது போட்டி நடைபெறும் மைதானமும் புற்கள் நிறைந்ததாக இருப்பதால் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்நிலையில் முதல் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா இரண்டாவது போட்டியில் விளையாடாமல் இருப்பது அணிக்கு மேலும் பின்னடைவைத் தரும். அவருக்குப் பதில் அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |