ரயில் பயணியரே உஷாராக இருங்கள் – ஐஆர்சிடிசி (IRCTC) எச்சரிக்கை கடிதம்

0
IRCTC

இந்திய ரயில்வே இன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியாக ஐஆர்சிடிசி (IRCTC) செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த பெயரை பயன்படுத்தி பல போலியான இணையதளங்கள் மக்களிடம் மோசடி செய்து வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில் ஐஆர்சிடிசி (IRCTC) ஒரு எச்சரிக்கை கடிதத்தை அதன் பயனாளர்களுக்கு அனுப்பி உள்ளது.

ஐஆர்சிடிசி (IRCTC) அனுப்பியுள்ள இமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை அறிவித்திருப்பதாக விளம்பரம் செய்யும் www.irctcour.com இணையதளம் போலியானது. இது மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் என நினைக்கும் பயனாளர்கள் அதில் டிக்கெட் முன்பதிவுகளை செய்கிறார்கள். இதனால் பணம் ஏமாற்றும் கும்பலிடம் சேர்கிறது.

இது தொடர்பாக இரு பயனாளர்கள் அளித்த புகாரின் பெயரில் தற்போது இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here