IPL 2023: ஒரே நாளில் இன்று இரண்டு போட்டிகள்…, புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண போவது யார்??

0
IPL 2023: ஒரே நாளில் இன்று இரண்டு போட்டிகள்..., புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண போவது யார்??
IPL 2023: ஒரே நாளில் இன்று இரண்டு போட்டிகள்..., புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண போவது யார்??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ஒரே நாளில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளின் விவரம் பின்வருமாறு காணலாம்.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது சீசன் 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இதுவரை 38 லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அதாவது, மாலை 3.30 மணிக்கு நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இரவு 7.30 மணிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.04.2023) – முழு விவரம் உள்ளே!!

இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது 8 புள்ளிகளுடன் தற்போது, 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்தினால், முதல் 2 இடங்களை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதே போல, புள்ளிப் பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருக்கும், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள், இனி தொடர் வெற்றிகளை குவித்து புள்ளிப் பட்டியலில் முன்னேற முயற்சிக்கும். இதனால், இன்று நடைபெற உள்ள இந்த இரண்டு போட்டிகளின் முடிவால், புள்ளிப் பட்டியலில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

KKR அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

என் ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (சி), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

GT அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (சி), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், ஜோஷ் லிட்டில், முகமது ஷமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here