
கடந்த மார்ச் மாத இறுதி முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் பல்வேறு மைதானங்களில் பல்லாயிரம் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளன. இதன்படி, தற்போது வரை அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 முதல் 13 வரை போட்டிகள் விளையாடி முடிந்துள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த லீக் போட்டிகள் அனைத்தும் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கின்றன. இதில், முதல் இரண்டு (மே 23, 24) பிளே ஆப் போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
கார்த்திக் வாழ்க்கையில் இடியை இறக்கிய திரிஷா.., பயில்வான் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!!
இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவலை விரைவில் நிர்வாகம் அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.