IPL அரங்கில் தோனி படைத்த மகத்தான சாதனைகள்…, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து அவரை கொடுத்த ஹிண்ட்!!

0
IPL அரங்கில் தோனி படைத்த மகத்தான சாதனைகள்..., அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து அவரை கொடுத்த ஹிண்ட்!!
IPL அரங்கில் தோனி படைத்த மகத்தான சாதனைகள்..., அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து அவரை கொடுத்த ஹிண்ட்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனின் பட்டத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த GT அணி 214 ரன்கள் எடுக்க, மழை குறுக்கிட்டதால் 15 ஓவரில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK அணி களமிறங்கியது. கடைசி பந்து வரை நீடித்த இந்த போட்டியில், CSK அணி ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் மூலம், CSK அணிக்கு ரூ. 20 கோடியும், 2வது இடம் பிடித்த GT அணிக்கு 13 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மூலம், CSK யின் தல தோனி பல தனித்துவமான சாதனைகளையும் படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் அரங்கில் தனது 250 போட்டியில் களமிறங்கிய தோனி குஜராத்தின் சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்து விக்கெட் எடுத்ததன் மூலம் டி20யில் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் விக்கெட் கீப்பர் ஆனார்.

ஏய்.., நீ வான்னு சொன்னா வரணும்.., இல்லனா போகணுமா?? ராதிகாவை மட்டமாக பேசிய கோபி!!!

விக்கெட் கீப்பராக இவர், 377 போட்டிகளில் 213 கேட்ச்கள் மற்றும் ஸ்டம்பிங் 87 என 300 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மேலும், CSK அணி இவரது தலைமையின் கீழ் தான் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு தோனி, உடல் ஒத்துழைத்தால் நிச்சயம் களத்தில் இறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here