அடேங்கப்பா.., இனியா சீரியல் ஆலியாவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவு கூடிருச்சா?? லீக்கான தகவல்!!

0
  அடேங்கப்பா.., இனியா சீரியல் ஆலியாவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவு கூடிருச்சா?? லீக்கான தகவல்!!
விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆலியா மானசா. அதில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவி என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதன் பின் இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் சீரியலில் நடிப்பதற்கு கேப் விட்டார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைந்த ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஹீரோயினாக பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த சீரியல் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் இப்போது ஆலியாவின் நடிப்பினால் டிஆர்பியிலும் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் இனியா சீரியலுக்காக ஆலியா மானசா நாள் ஒன்றுக்கு ரூபாய் 20000 இதுவரை சம்பளமாக பெற்று வந்துள்ளார். தற்போது இவரின் சம்பளம் இதை விட இன்னும் அதிகரித்து ரூ.30,000 வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here