டிக்டாக்கிற்கு அடிமையான இந்தியர்கள் (Tik Tok) – 550 கோடி மணிநேரம்..!

0

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியர்கள் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் மூழ்கிக் கிடந்ததாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

டிக்டாக் முதலிடம்..!

ஆப் அன்னி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலியில் டிக் டாக் முதலிடம் பிடித்துள்ளது. பேஸ்புக், வாட்ஸஅப் போன்ற பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் டிக் டாக் செயலி தூக்கி சாப்பிட்டு விட்டது. 2018ம் ஆண்டு 90 கோடி மணிநேரம் இந்த செயலியில் கழித்த இந்தியர்கள், கடந்தாண்டு 550 கோடி மணிநேரம் செலவழித்துள்ளனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

டிக் டாக் பயனர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் இருந்தாலும் அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பிரபலமாக நினைத்து..!

நிறைய நபர்கள் தான் பிரபலமாக வேண்டும் என நினைத்து ஆபாசமாகவும் வீடியோ பதிவிடுகின்றனர். மேலும் வயது தடையின்றி அனைவரும் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதில் ஏகப்பட்ட லைக்குகள் கிடைத்தாலும் அதனால் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் நன்மை இல்லை. மேலும் இதனால் பல குடும்பங்களின் வாழ்க்கையும் சீரழிந்துள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிக்டாக் செயலி ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் இதுவரை சுமார் 32.3 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியை சுமார் 15.6 கோடி முறை டவுன்லோடு செய்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here