184 வாக்குகள்!! எட்டாவது முறை!! ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியா தேர்வு..!

1
India un

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் இந்தியா 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்:

ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அதில் 10 நாடுகள் நிரந்தம் இல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2020-21 வருடத்திற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் கண்டத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. இதில் வேறு எந்த நாடும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

India United Nations
India United Nations
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா அதிகபட்சமாக 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் 8வது முறையாக இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 1 வரை 2 வருடத்திற்கு இந்தியா இந்த பதவியில் நீடிக்கும். இந்தியா தவிர நிரந்தரமில்லாத உறுப்பினராக அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தேர்வாகி உள்ளன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here