இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் தனியார் மயமாக்கம் – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!!

0

இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்கள் தனியார் மயமாக்குவது குறித்த அதிகாரப்பூர்வமான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 12 துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் தனியார் மயமாக்கம்

கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ம் தேதி ‘துறைமுகங்கள் அதிகார மசோதா – 2020’ என்ற அதிகார மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய துறைமுகங்கள் தனியார் மயமாக்குவது குறித்த இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 84 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மசோதாவிற்கு எதிராக 44 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதிகபட்ச எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நாட்டிலுள்ள முக்கியமான 12 துறைமுகங்களின் இயக்கம், ஒழுங்குமுறை, திட்டமிடல் ஆகியவற்றை இந்த மசோதா வழங்கும். மேலும் துறைமுகங்களின் இயக்கம், நிர்வாகம், கட்டுப்பாட்டு மேலாண்மை ஆகியவற்றை குறித்து, துறைமுகங்கள் ஆணையவாரியத்துக்கு வழங்குவதற்கு இந்த மசோதா வழிசெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிஜூ ஜனதா தளம், ஒய்ஆர்எஸ் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here