சிறைக்கைதிகள் அதிகமுள்ள மாநிலங்களில் உ.பி முதலிடம் – மத்திய அரசு தகவல்!!

0

நாடாளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவையில் நாட்டில் உள்ள சிறைக்கைதிகள் எண்ணிக்கை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பிரிவுகள் பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

கைதிகள்:

தற்போது நாடாளமன்றத்தில் மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள சிறை கைதிகள் எத்தனை பேர் உள்ளார்கள், அதில் எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள், எத்தனை பேர் முஸ்லிம்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, தற்போது நாடு முழுவதும் உள்ள சிறையில் மொத்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்தி 600 கைதிகள் உள்ளனர் என்று கூறினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அதில் 65.90 சதவீதம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் மற்ற 1 லட்சத்து 26 ஆயிரத்து 393 பேர் இதர பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்று கூறினார். இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கூறியதாவது, இவர்களில் 1,62,800 கைதிகள் ஓபிசி, 99,273 கைதிகள் எஸ்சி, 53,336 கைதிகள் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் மொத்த கைதிகளில் 4,58,687 பேர் ஆண்கள் மற்றும் 19,913 பேர் பெண்கள் என்றும் கூறினார். பெண்களில் 6,360 பேர் ஓபிசி, 2,281 பேர் எஸ்டி மற்றும் 4,467 பேர் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள்.

விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கம்!!

மேலும் அதிகபட்சமாக நாட்டிலையே உத்தர பிரதேச மாநிலத்தில் தான் கைதிகள் உள்ளார்கள் என்று கூறினார். அங்கு சுமார் 1,01,297 கைதிகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் 44,603 மற்றும் பீகார் மாநிலத்தில் 39,814 கைதிகள் உள்ளனர் என்று கூறியுள்ளார். அதிகமான எஸ்சி, ஓபிசி மற்றும் இதரப்பிரிவினர் உத்தர பிரதேசத்திலும் எஸ்டி பிரிவினர் மத்திய பிரதேசத்திலும் உள்ளார்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here