இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? பிரதமர் அதிரடி முடிவு??

0

இந்தியாவில் சில மாநிலங்களில்,  தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல் படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.  கொரோனாவின் உருமாறிய  ஓமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருவதால், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக, மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

தற்போது, தொற்று பரவல் இந்தியா முழுவதும் ஓரளவு கட்டுக்குள் இருந்து வந்தாலும் சீனா, நெதர்லாந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் சமோவா உள்ளிட்ட பல பகுதிகளில் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த XE என்ற வைரஸ் மோசமாக பரவி வருகிறது. இதனால், பல பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் இந்தியாவில் தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தலைமையில் அவசரக் கூட்டம் ஒன்று விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக, கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தால்,  ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here