சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிப்பு –  இந்திய அரசு

0

மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. டிஜிசிஏ அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சரக்கு விமானகளுக்கு இது போன்ற எவ்வித தடையும் இல்லை.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வீச்சு மிக தீவிரமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே சர்வதேச விமான போக்குவரத்துக்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இந்த தடை மேலும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில்,  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் சரக்கு விமானங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவு ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நேரடி விமான போக்குவரத்து சேவையை தடை செய்வதாக ஆஸ்திரேலியா,கனடா,ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முடிவு எடுத்துள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here