இந்தியாவில் 28 ஆயிரத்தை தொடும் கொரோனா பாதிப்பு – அதிகரித்த உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட எண்ணிக்கை உயிரிழப்புகள் 826ல் இருந்து 872 ஆக அதிகரித்து உள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,914ல் இருந்து 6,185 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 342 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 1,076 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

டாப் 5 கொரோனா பாதித்த மாநிலங்கள்:

  1. மஹாராஷ்டிரா – 8,068 பேர்
  2. குஜராத் – 3,301 பேர்
  3. டெல்லி – 2,918 பேர்
  4. ராஜஸ்தான் – 2,185 பேர்
  5. மத்தியப்பிரதேசம் – 2,095 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here