இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால் இதன் பாதிப்பு தீவிரமாகி உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் இதுவரை 24,530 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நல்ல செய்தியாக 5,498 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 780 பேர் உயிரிழந்து உள்ளனர். 18,252 பேர் வைரஸ் தாக்கத்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநில வாரியாக பாதிப்பு விபரம்:
- மஹாராஷ்டிரா – 6,817 பேர் பாதிக்கப்பட்டும், 957 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 301 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- குஜராத் – 2,815 பேர் பாதிக்கப்பட்டும், 265 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 127 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- டெல்லி – 2,514 பேர் பாதிக்கப்பட்டும், 857 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- ராஜஸ்தான் – 2,059 பேர் பாதிக்கப்பட்டும், 493 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- மத்தியப்பிரதேசம் – 1,846 பேர் பாதிக்கப்பட்டும், 210 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 92 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- தமிழ்நாடு – 1,755 பேர் பாதிக்கப்பட்டும், 866 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- உத்திரப்பிரதேசம் – 1,621 பேர் பாதிக்கப்பட்டும், 226 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |