ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா உறுதி – உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

0

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று வீரியம் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக 97,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கிய வைரஸால், பல நாடுகள் ஸ்தம்பித்து போயின. இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக வேகமெடுக்க தொடங்கியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona virus in india
corona virus in india

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை தாண்டும் என ஹைதெராபாத் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 97,570 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,59,985 ஆக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 1,201 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் (1.66%) குறைந்தும், குணமடைபவர்கள் விகிதம் (77.77%) அதிகமாகவும் உள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று மட்டும் 81,533 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 36,24,197 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here