லடாக் தாக்குதலில் இந்தியா வீரர்களில் 20 பேர் பலி – சீன வீரர்கள் அதிகளவு பலியானதாக தகவல்..!

0
india-china
india-china

இந்தியா, சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் லடாக் எல்லை பிரச்சனை மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லை

தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனையும் மாத கணக்கில் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் சில தினங்களுக்கு முன்னர் நடந்தேறியது. இருப்பினும் தற்போது நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மோதலில் இரு நாட்டினர் படைகளும் சேதம் அடைந்தன.

ladakh-india
ladakh-india

இந்த சண்டையால் சீனாவில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இந்தியாவில் ர்னல் சந்தோஷ் பாபபு, ஹவில்தாரான, தமிழகத்தை சேர்ந்த பழனி மற்றும் ஓஜா ஆகியரின் மரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஜீரோ டிகிரி வெப்பநிலை கொண்ட பகுதியில் இந்த சண்டை நடைபெற்றுள்ளது. இங்கு துப்பாக்கி சூடு ஏதும் நடத்தப்பட வில்லை. கற்கள் மற்றும் பயங்கர அயிதங்களால் சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளன.

ladaak war
ladaak war

கற்கள் வீசி சில மணி நேரத்திற்கு இந்த தாக்குதலை சீனா நடத்தியுள்ளது. இந்தியா ராணுவமும் இதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளது. மேலும் இந்த சண்டையில் இறந்தவர்களுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எல்லையில் நடந்த பிரச்சனையை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயர் அதிகாரி ஆகியோர் அவசர ஆலோசனையை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா உளவு துறை தற்போது வெளியிட்ட அரிக்கரையில் சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here