பிரிட்டன் விமான சேவை மீண்டும் துவக்கம் – பல கட்டுப்பாடுகளுடன் டெல்லியில் களமிறங்கிய விமானம்!!

0

உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு சேவையை நிறுத்தியது. தற்போது இன்று முதல் இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு சேவை தொடங்கியுள்ளது.

உருமாறிய கொரோனா:

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருமாறி புதிய வைரஸாக பரவி வந்தது. முந்தய கொரோனா வைரஸை விட இது 75 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இதனை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்துக்கு சேவையை நிறுத்தியது. மேலும் இந்தியாவும் கடந்த 23ம் தேதி முதல் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்துக்கு சேவையை நிறுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பல கட்டுப்பாடுகளை பின்பற்றி பிரிட்டன் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு சேவை துவங்கியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து லண்டன் ஹீத்ரூவிமான நிலையத்திற்கு ஏர் இந்திய விமானம் ஒன்று சென்றது. அதேபோல் மும்பையில் இருந்து லண்டனுக்கு ஓர் விமான சென்றுள்ளது. தற்போது இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானிகளுக்கு இந்தியா அரசு பல நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் துவங்கிய விமான சேவை:

அதன்படி லண்டனில் இருந்து இந்தியா வரும் பயணிகள் சுமார் 72மணி நேரங்களுக்கு முன்பாகவே தங்களது சுயவிவர படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கொரோனாக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர் அங்கேயே தனிமைப்படுத்தப்படுவர்.

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டண ஆர்டி. பிசிஆர் சோதனைகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். ஆர்.டி. பிசிஆர் சோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனுக்கான விமானபோக்குவரது இன்று சேவை துவங்கியுள்ளதால் இன்று பிரிட்டனில் இருந்து டெல்லிக்கு 256 பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் வந்து சேர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here