வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா – உலகக்கோப்பையில் 2வது வெற்றி..!

0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.

ஷபாலி வர்மா அதிரடி..!

பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஷபாலி வர்மா அதிரடியாக 4 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 17 பந்தில் 39 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 143 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.

இந்தியா வெற்றி..!

வங்கதேச அணியில் முஷிதா கதுன் (30) மற்றும் நிகர் சுல்தானா (35) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலக கோப்பையில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here