உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி தேர்வு – ஐ.சி.சி. தகவல்…

0

மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் எது என்பது குறித்து தெரிந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை ஐசிசி தெரிவு செய்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போது வரை நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் மிக உச்சக்கட்டமாக இருந்த டெஸ்ட் தொடர் பற்றி அறிய விரும்பிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதற்கான வாக்கெடுப்பு ஒன்றை சமூக வலைதளங்கள் வழியே நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை தேர்ந்து எடுத்து  கணக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடை பெற்ற தொடர்களும் அடங்கும்.

இவற்றிலிருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அதிக வாக்குகள் பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியது. இதில் இருந்து இறுதிசுற்றுக்கு  போட்டியிட இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21 , இந்தியா-பாகிஸ்தான் 1999 தொடர்கள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் 2020-21ம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் பெஸ்ட் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பெஸ்ட் தொடர் என்னும் பட்டத்தை தன் வசப்படுத்தியது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here