ஆகட்டும் டா தம்பி ராஜா … நட ராஜா … மெதுவா … போங்கய்யா – சீனாவில்  நடந்த யானைகளின் அழகான காட்சி!!!

0

15 காட்டு யானைகளின் ஒரு கூட்டம் சீனாவில் காடுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்கள் வழியாக 500 கி.மீ. தொலைவில் நடந்து தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

சீனாவில்  நடந்த யானைகளின் அழகான காட்சி:

சுமார் 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை கடந்து வந்த யானை மந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யானைகளின் கூட்டம், குன்மிங் எனும் நகருக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கூட்டமாகப் படுத்துக்கிடப்பது தெரிகிறது. இந்த மந்தை சீனாவின் யுன்னான் மாகாணத்திக் இருந்து கிளம்பி, பிராந்தியத்தின் தலைநகரான குன்மிங்கைச் சுற்றியுள்ள பகுதிக்குச் சென்றுள்ளது.

ஏழு மில்லியனுக்கும் அதிகமான நகரமான குன்மிங்கிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள யூக்ஸியில் இந்த மந்தை இருந்தது என்று அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 15 யானைகளைக் கொண்ட அந்தக் கூட்டம், கடந்து வந்த பாதையில் இருந்த வயல்களில் தங்கள் மனம் போன போக்கில் பயிர்களை உண்டு அதகளம் செய்துவந்தன.

2020 மார்ச் மாதத்தில் 16 யானைகள் தங்கள் பயணத்தை தொடங்கின. ஒரு யானைக்கு குழந்தை பிறந்ததால், தாயும் சேயும் மந்தையில் இருந்து பிரிந்துவிட்டன. ஆறு பெண் யானைகள், மூன்று ஆண் யானைகள், மூன்று குட்டி யானைகள், மூன்று களிறுகள் என 15 யானைகள்கொண்ட குழு அபூர்வ பயணத்தை தொடர்கின்றன. தற்போது யானைகள் ஓய்வெடுப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here