Tuesday, May 21, 2024

இனி மிஸ்ட் கால் செய்து கேஸ் சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம் – இண்டேன் நிறுவனம் அறிவிப்பு!!

Must Read

இனி இண்டேன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிஸ்ட் கால் செய்து தங்களது சிலிண்டர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில் இது மக்களுக்கு சுலபமான வழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருளான எரிவாயு சிலிண்டர்:

இந்திய மக்கள் அனைவரும் சமையல் செய்ய அத்தியாவசியமாக பயன்படுத்துவது, எரிவாயு உருளை எனப்படும், கேஸ் சிலிண்டர் ஆகும். சிலிண்டர்களின் விலை மாதத்தின் ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்படும். இந்த சிலிண்டர்களை நாம் தேவைப்படும் போது பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனமான இண்டேன் தற்போது தனது வாடிக்கையாளர்கள் மிஸ்ட் கால் செய்து தங்களது சிலிண்டர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இன்றைய அவசரமான கால சூழலில் இது மிகவும் உபோயோகமாக மக்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையினை மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். மக்கள் மிக எளிதாக இந்த வசதியினை பயன்படுத்திகொள்ள இந்த முறை உதவும் என்று தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது – தமிழ் நடிகர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!!

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணிற்கு அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் புதிய இணைப்பு வேண்டும் என்றாலும் இந்த எண்ணில் இருந்து அழைத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அடேங்கப்பா., “அரண்மனை 4” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. தற்போது இவர் இயக்கி, நடித்துள்ள “அரண்மனை 4” என்ற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -