8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்…, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!!

0
8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்..., இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!!
8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்..., இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

முத்தரப்பு தொடர்:

ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணியானது, முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த முத்தரப்பு தொடரில், இந்திய அணி தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில், கடைசி போட்டி மட்டும் முடிவில்லாமல் ஆனது. இதையடுத்து, லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்தியா சார்பாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், மந்தனா (5), ஹர்லீன் தியோல் (13) ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். இவர்களுக்கு பின் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் (42*), ஹர்மன்ப்ரீத் கவுர் (32*) ரன்கள் எடுத்து 13.5 வரையில் இலக்கை அடைந்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி, வரும் 2ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here