உலக கோப்பை IND vs SL 2023: 357 ரன்களை குவித்த இந்தியா…, விராட், கில், ஸ்ரேயாஸ் அரை சதம் விளாசல்!!

0
உலக கோப்பை IND vs SL 2023: 357 ரன்களை குவித்த இந்தியா..., விராட், கில், ஸ்ரேயாஸ் அரை சதம் விளாசல்!!
உலக கோப்பை IND vs SL 2023: 357 ரன்களை குவித்த இந்தியா..., விராட், கில், ஸ்ரேயாஸ் அரை சதம் விளாசல்!!
சர்வதேச இந்திய அணியானது, உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்.
இதில், ரோஹித் சர்மா 4 ரன்களில் வெளியேற சுப்மன் கில்லுடன் விராட் கோலி இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து அசத்தினார். இதில், சுப்மன் கில் 92, விராட் கோலி 88 ரன்களில் வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் 82, கே எல் ராகுல் 21, சூர்யகுமார் யாதவ் 12, முகமது ஷமி 2, ஜடேஜா 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்துள்ளது. 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here