
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதி கல்யாணத்திற்கு மீனா உதவி செய்ததால் முத்து அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். அதன் பின் குடும்பத்தில் வரும் சண்டைகளை பார்த்து அண்ணாமலைக்கு நெஞ்சு வலி ஏற்பட அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். இப்படி சீரியல் எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ப்ரோமோவில் அண்ணாமலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார். அப்போது வீட்டில் மீனா இல்லாததால் அவரை எங்கே என்று கேட்க முத்து முதலில் மாத்திரையை சாப்பிடுங்கள் என்கிறார். ஆனால் அண்ணாமலை மீனா வீட்டுக்கு வராமல் நான் மாத்திரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். முத்து வேறு வழியில்லாமல் மீனாவை வீட்டுக்கு அழைக்க அவர் எங்கே என்று கேட்கிறார். பின் முத்து நீ வந்தா தான் அப்பா மாத்திரை சாப்பிடுவாராம் என்று சொல்ல மீனா மாமாவுக்காக வீட்டுக்கு வருகிறேன் என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
அப்பாவை தெருத்தெருவாக தேடும் சுடர்.., அபி எடுத்த அதிரடி முடிவு.., உண்மை வெளிப்படுமா? TVET ப்ரோமோ!!