இது நடந்தா.. இன்னைக்கு இந்தியா ஜெயிக்க போவது Confirm டா – உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள்!

0
இது நடந்தா.. இன்னைக்கு இந்தியா ஜெயிக்க போவது Confirm டா - உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள்!
இது நடந்தா.. இன்னைக்கு இந்தியா ஜெயிக்க போவது Confirm டா - உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள்!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பவுலிங்கை தேர்வு செய்வார்கள் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியா டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்யும்..??

ஆசிய கோப்பை தொடருக்கான ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளது. இன்று இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. மேலும் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பவுலிங் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யுமா அல்லது பவுலிங்கை தேர்வு செய்யுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. ஏனெனில் இப்போட்டி நடைபெறும் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது தான் நல்லது.

மேலும் சற்று முன் வரை துபாய் சர்வதேச மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக உள்ளதால் மழைக்கு வாய்ப்பில்லை. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி மட்டுமில்லாது இலங்கை அணியும் டாஸ் வென்றால் பந்து வீச்சு தான் தேர்வு செய்யும் என்று தெரிகிறது. மேலும் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பந்து வீச்சை தேர்வு செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here