தங்க நகை பிரியர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் – ஒரு சவரன் இவ்வளவா? இனி நிலைமை கஷ்டம் தான்!

0
தங்க நகை பிரியர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் - ஒரு சவரன் இவ்வளவா? இனி நிலைமை கஷ்டம் தான்!

தமிழகத்தில் விற்கப்படும் ஆபரணத் தங்கத்தின் விலை மலமலவென அதிகரித்து தற்போது விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.

அதிகரித்த நகை விலை:

உலகில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் தங்கம் மீது அளவு கடந்த நாட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது சூழ்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக அமைந்து வருகிறது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்தால் நாளை கூடும், இன்று கூடினால் நாளை குறைவதால், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் முரண்பாடாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடந்த வாரம் ஓரளவுக்கு குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் விற்கப்படும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,750-ஆக உயர்ந்து கடைகளில் விற்கப்படுகிறது.

அடேங்கப்பா.. பாகிஸ்தான் தூணையே சச்சிட்டீங்களே – அப்போ அந்த நாட்டுக்கு வெற்றி உறுதி போலயே!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து 59 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.59,000 ஆகவும் அதிகரித்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிகரிப்பினால் மக்கள் தங்கம் வாங்குவதில் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது உயர்ந்திருப்பது மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here