இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் இதோ…, 2வது போட்டியில் இதில் மாற்றம் ஏற்படுமா??

0
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் இதோ..., 2வது போட்டியில் இதில் மாற்றம் ஏற்படுமா??
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் இதோ..., 2வது போட்டியில் இதில் மாற்றம் ஏற்படுமா??

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

IND vs NZ:

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஆனால், தொடர் 7 வெற்றிக்கு பிறகு தோல்வி அடைந்திருப்பது இந்திய அணிக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு 3 காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானமானது, இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால், பந்து வீசுவதில் தடுமாற்றம் ஏற்பட்டு பேட்டிங்க்கு அதிக சாதகம் விளைவிக்கும். இதனால், டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்வு செய்தார். போட்டி நகருக்கையில் பேட்டிங்க்கு உதவும் என எண்ணினார்.

ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, அர்செனல் அணியை வீழ்த்திய மான் சிட்டி!!

ஆனால், நேற்றைய போட்டி இதற்கு மாறாக நடைபெற்றது. மேலும், நியூசிலாந்து அணி 19 ஓவர் வரையிலும் 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 20 ஓவர் விச வந்த அர்ஷ்தீப் சிங் நோ பால், சிக்ஸர், பவுண்டரி என 27 ரன்களை வாரி கொடுத்துள்ளார். இது, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 170 க்கு மேல் உயர மிக முக்கிய காரணமாக இருந்தது. இதனை தொடர்ந்து, தீபக் ஹூடாவின் ஆட்டமும் இந்திய அணிக்கு பாதகமாக மாறியது. இந்த தவறுகள் எல்லாம் அறிந்து இந்திய அணி அடுத்த போட்டியில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here