IND vs AUS: 17 பந்தில் 30 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா…, சிக்ஸரில் சாதனை படைத்து அபாரம்!!

0
IND vs AUS: 17 பந்தில் 30 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா..., சிக்ஸரில் சாதனை படைத்து அபாரம்!!
IND vs AUS: 17 பந்தில் 30 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா..., சிக்ஸரில் சாதனை படைத்து அபாரம்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவினாலும், இந்திய கேப்டனான ரோஹித் சர்மா ஆசிய அளவிலும், சிக்ஸர்களிலும் சாதனைகளை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடியது . இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை அடுத்து, 1-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. இதனால், இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில், வெற்றியை மட்டுமே பெற்று வந்த இந்திய அணி முதன் முறையாக தொடரை இழந்து ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்திய அணி தோல்வியை தழுவினாலும், வெற்றிக்காக போராடிய இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, இந்திய கேப்டனான இவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது போட்டியில் 4 ரன்கள் எடுத்த போது, ஆசிய அளவில் 10,000 ரன்களை கடந்த 8 வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு பரிசளிப்பு விழா., சிறப்பு ஏற்பாடு!!!

மேலும், இந்த போட்டியில், 17 பந்தில் தலா 2 பவுண்டரி மற்றும் சிக்ஸர் உட்பட 30 ரன்களை ரோஹித் அடித்தன் மூலம், தற்போது வரை ஆசிய அளவில் 10,026 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 2 சிக்ஸர்களை ரோஹித் விளாசியதன் மூலம், சொந்த மண்ணில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ள வீரர்களுக்கான பட்டியலில் ரோஹித் சர்மா 256 சிக்ஸர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here