ஜடேஜா டெஸ்ட் தொடரில் களமிறங்கணும்னா இத செஞ்சே ஆகணும்…, பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு!!

0
ஜடேஜா டெஸ்ட் தொடரில் களமிறங்கணும்னா இத செஞ்சே ஆகணும்..., பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு!!
ஜடேஜா டெஸ்ட் தொடரில் களமிறங்கணும்னா இத செஞ்சே ஆகணும்..., பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், பிசிசிஐ அவருக்கு ஒரு கட்டுப்பாட்டு விதித்துள்ளது.

ஜடேஜா:

இந்திய அணி வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இந்த தொடரானது, 1996 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசனை கடந்துள்ள இந்த தொடரில், இந்திய அணி 9, ஆஸ்திரேலிய அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை மட்டும் இந்த டிராபியானது டிராவில் முடிந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த இரு வருடங்களாக இந்த டிராபி சில காரணங்களாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த தொடர் வரும் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற இருப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே, இந்த டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், கடந்த ஆண்டு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் ஜடேஜா இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

தோனி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி…, இலங்கைக்கு எதிராக நிகழுமா??

இவர், இந்த டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், பிசிசிஐயானது இவருக்கு ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஜடேஜா ஒரு உள்ளூர் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஜடேஜா ரஞ்சி டிராபியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here