தோனி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி…, இலங்கைக்கு எதிராக நிகழுமா??

0
தோனி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..., இலங்கைக்கு எதிராக நிகழுமா??
தோனி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி..., இலங்கைக்கு எதிராக நிகழுமா??

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி, தோனியின் சாதனையை முறியடிக்க உள்ளார்.

அதிக அரைசதம்:

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர்களில், இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இதையடுத்து, இந்த தொடரின் 3வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தின் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக அதிக அரை சதங்களை அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணிக்கு எதிராக 25 முறை அரை சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 மற்றும் 21 என அரை சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை சச்சின் இடம் பிடித்துள்ளார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் ஜடேஜா…, அணி விவரம் உள்ளே!!

இவரை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிராக 21 அரை சதங்களை அடித்து தோனி 4வது இடத்திலும், விராட் கோலி இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தலா 20 அரை சதங்களை அடித்து 5 வது இடத்திலும் உள்ளனர். நாளை நடைபெற இருக்கும், இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடிக்கும் பட்சத்தில், தோனியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here