T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

சர்வதேச இந்திய அணியானது, இன்று (நவம்பர் 23) முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு அணி வீரர்களை தயார்படுத்தும் நோக்குடன் இந்த தொடரை இரு அணிகளும் விளையாட உள்ளன. இதனால், இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தங்களது அசாத்திய திறமைகளை இன்று (நவம்பர் 23) முதல் தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த வகையில், இந்திய அணியானது ஐசிசியின் டி20 நம்பர் 1 பேட்ஸ்மேன்னான சூர்யகுமார் தலைமையில் களமிறங்க உள்ளது. 50 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியிடம் தவற விட்ட இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்ல தற்போது இருந்தே பல திட்டமிடல்களை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று நடைபெற உள்ள முதல் போட்டியை வெற்றியுடன் எந்த அணி துவக்கும் என பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ( சி), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்

ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (சி), டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here