உலக கோப்பை 2023: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா…, ஆப்கானிஸ்தான் அதற்கு இடம் கொடுக்குமா??

0
உலக கோப்பை 2023: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா..., ஆப்கானிஸ்தான் அதற்கு இடம் கொடுக்குமா??
உலக கோப்பை 2023: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா..., ஆப்கானிஸ்தான் அதற்கு இடம் கொடுக்குமா??

ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், இன்று இந்திய அணியானது 2வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியை வென்ற இந்திய அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் +0.883 என்ற ரன்ரேட்டுடன் 4 வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்லும் எனில் டாப் 2 இடத்திற்கு முன்னேற கூடும்.

Enewz Tamil WhatsApp Channel 

இதே போல ஆப்கானிஸ்தான் அணியானது தனது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தால் இன்னும் புள்ளிக்கணக்கை திறக்காமலேயே உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும் என்பதால், இந்திய அணிக்கு எதிராக கடுமையாக போராடும். இதனால், இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா(சி), இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆப்கானிஸ்தான் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி (சி), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, ரஷித் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹா, நவீன் உல் ஹக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here