காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!!!

0
காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!!!
காவிரி நீர் விவகாரம்: தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!!!

தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை கர்நாடக அரசு நடப்பாண்டில் திறந்துவிட தாமதமாக்கியது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் கருகி சேதமடைந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டதின் பேரில், காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும் இதுவரை கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் கர்நாடக அரசின் இந்த செயலை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதன்படி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விவசாயிகள் பலரும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here