#INDVSAUS.., அதிக ஆப் செஞ்சுரி அடித்த வீரர்கள் பட்டியல்.., இதுலயும் விராட் தான் முதலிடமா??

0
#INDVSAUS.., அதிக ஆப் செஞ்சுரி அடித்த வீரர்கள் பட்டியல்.., இதுலயும் விராட் தான் முதலிடமா??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பற்றிய சில தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

IND VS AUS

உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், ஆசிய கோப்பையில் தனது 71 வது சதத்தை எட்டி, பல மாதங்களுக்கு பிறகு பார்மை மீட்டுள்ளார். இவர் தற்போது வரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 அரை சதங்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக 3 அரை சதங்களுடன் ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் 2 ம் இடத்தில் உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதே போன்று 3 வது இடத்தில் 2 அரை சதங்களுடன் ஷிகர் தவான், ராகுல், கவுதம் கம்பீர் ஆகியோர் உள்ளனர். இதில் விராட், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலிய T20 தொடரில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில், கே எல் ராகுல் ஆசிய கோப்பையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ரன்களும் எடுக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here